Monday 15 October 2012

மீண்டும் வங்கி எழுத்துத் தேர்வு!!



19 பொதுத்துறை வங்கி எழுத்தர் பணியிடங்களுக்ககான தேர்வை IBPS என்ற அமைப்பு நடத்தி வருகிறது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எழுத்துத் தேர்வு நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2011 ஆம் ஆண்டில்(நவம்பர்/டிசம்பர்) தேர்வு நடந்தபிறகு, இப்போதுதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கித்துறையில் இலட்சக்கணக்கான பணியிடங்கள் வரும் மூன்றாண்டுகளுக்குள் நிரப்பப்பட உள்ளன.

ஏற்கனவே இருந்த தேர்வு நடைமுறையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வரையில், எழுத்தராகப் பணியில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. தற்போது, குறைந்தபட்ச கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என்று மாற்றியுள்ளனர். "எழுத்துத் தேர்வு" என்ற நிலை மாறி "ஆன்லைனில் தேர்வு" என்ற நடைமுறை கொண்டு வரப்படுகிறது.

தேர்வு முறையில், கேள்விகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பது முக்கிய மாற்றமாகும். ஒவ்வொரு பாடத்திலும் தலா 40 என்ற முறையில் 200 கேள்விகள் கேட்கப்படும். இரண்டு மணி நேரம் இதற்காக ஒதுக்கப்படுகிறது.

பாடங்கள்

1. Reasoning, 
2. English Language, 
3. Numerical Ability, 
4. General Awareness with specific reference to Banking Industry. 
5. Computer Knowledge.

விண்ணப்பங்களைப் பதிவு செய்வது ஆன்லைன் மூலம் மட்டும்தான் என்பது கடந்த முறையே அமலாகிவிட்டது. அதுதான் தற்போதும் உள்ளது. அக்.15 ஆம் தேதி முதல் பதிவுகள் துவங்கியுள்ளன. ஆன்லைன் பதிவுக்குக் கடைசித்தேதி நவம்பர் 5. பதிவு செய்வதற்கான வசதி www.ibps.in என்ற இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச வயது 01.10.2012 அன்று 20 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயதைப் பொறுத்தவரையில், பொதுப்பிரிவினருக்கு 28, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 30, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 33 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பாக எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அது எந்தெந்த மையங்களில் நடக்கும் என்ற பட்டியலும் அறிவிப்பில் தரப்பட்டுள்ளது. பயிற்சி பெற விரும்புவோர் தங்களுக்கு அருகிலுள்ள மையத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். தேர்வு டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்து கொள்வதற்கு முன்பாக 18 பக்கங்களைக் கொண்ட அறிவிப்பை ஒருமுறை படித்துக் கொள்ளுதல் அவசியம்.

No comments:

Post a Comment