Sunday 4 November 2012

வங்கி அதிகாரிகள் எழுத்துத் தேர்வு: அம்பேத்கர் மைய மாணவர்கள் 17 பேர் வெற்றி

வங்கி அதிகாரிகள் பணி யிடங்களை நிரப்புவதற் கான எழுத்துத் தேர்வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடத்தப்பட்டு வரும் டாக் டர் அம்பேத்கர் கல்வி-வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்று வரும் 17 பேர் வெற்றி பெற்றுள் ளனர்.19 பொதுத்துறை வங்கி கள் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றில் பணி யாற்றுவதற்கான ஊழியர் களைத் தேர்வு செய்யும் பணியை ஐ.பி.பி.எஸ் என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இவற்றில் அதி காரிகள் பணிக்கான தேர்வு கள் நடந்து, அதற்கான முடி வுகள் அண்மையில் வெளி யாகின.வங்கித் தேர்வுகளுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் டாக்டர் அம்பேத்கர் கல்வி-வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்று வரும் எட்டு பேர் 19 பொதுத் துறை வங்கி அதிகாரிகள் நியமன எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் கள். திருச்சி மையத் தில் மூன்று பேரும், மன்னார் குடி மையத்தைச் சேர்ந்த ஒருவரும் வெற்றியடைந் துள்ளார்கள். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி களுக்கான எழுத்துத் தேர் வில், மதுரை மையத்திலி ருந்து எட்டு பேரும், கோவை மையத்தைச் சேர்ந்த ஒரு வரும் வெற்றி பெற்றனர்.எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வில் பங்கேற் பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரி நேர்முகத் தேர்வு போன்றவை அம் பேத்கர் பயிற்சி மையத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. மையத்தில் பயிலாமல் இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தலித் மற்றும் பழங் குடிப் பிரிவினரும் மாதிரி நேர்முகத் தேர்வுகளில் பங் கேற்கலாம் என்று மையத் தின் சார்பில் மாநில ஒருங் கிணைப்பாளர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.

Friday 2 November 2012

தலித்துகளுக்கு இலவச வங்கித்தேர்வு பயிற்சி!


டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் வேலைதேடும் தலித் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வங்கித்தேர்வுக்கான விளம்பரம் வந்துள்ளது. விண்ணப்பிக்க கடைசித்தேதி நவம்பர் 5. கடந்த ஆண்டு நடந்த தேர்வுக்கு ஒன்பது இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது எழுத்துத் தேர்வில் 92 பேர் நமது மையத்திலிருந்து தேர்ச்சி பெற்றனர். தற்போது 20 மையங்களாக அதிகரித்துள்ளது. சில மையங்களில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியாகவும், பல மையங்களில் தேர்வு முடியும்வரை பயிற்சி வகுப்புகளாகவும் நடக்கின்றன. கோவை, தென் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் வகுப்புகள் துவங்கிவிட்டன. மற்ற மையங்களில் துவங்குவதற்கான தேதிகள் தீர்மானிக்கப்பட்டு விட்டன. பயிற்சி பெற விரும்புவோர் மட்டுமல்லாமல், தயார் செய்பவர்களை வகுப்புக்கு அனுப்ப விரும்புவோர் கீழே தரப்பட்டுள்ள எண்களைக் கவனத்தில் கொள்ளலாம்.

வடசென்னை - 9443854756(அம்பிகா)
தென் சென்னை - 7871157979(இனியன்)
9444982364(கிருஷ்ணா)
மதுரை - 9443430782(கோவிந்தராஜன்)
9445863065(பாலு)
கோவை - 9442080800(கஜேந்திரன்)
9443321276(குமார்)
திருநெல்வேலி - 9486559316(பொன்னையா)
நாமக்கல் - 9443506890(கணேச பாண்டியன்) 
9442285345(முருகேசன்) 
விருதுநகர் - 9965690611(பவளவண்ணன்)
சிவகங்கை - 9500959431(பாரதிதாசன்)
திருச்சி - 9442163500(ஜோன்ஸ்)
வேலூர் - 9443358950(ராமன்)
9443813046(தசரதன்) 
தஞ்சாவூர், மன்னார்குடி, புதுக்கோட்டை, கும்பகோணம் - 9443075842(சேது)
கூடலூர்(நீலகிரி) - 9486293577(கருணாநிதி)
கடலூர் - 9442378723(கே.பி.சுகுமாரன்)
குன்னூர் - 9443092933(கே.ஆர்.ரவி)
பல்லடம்(திருப்பூர்) - 9659368665(பரமசிவம்)
கோவில்பட்டி - 9486471539(சக்திவேல்முருகன்)
கிருஷ்ணகிரி - 9942475155(சேது)
கணேஷ் (மாநில ஒருங்கிணைப்பாளர்) - 9442060775

வேலைவாய்ப்பு செய்திகள்


வடசென்னையில் கட்டணமில்லா பயிற்சி!